இருட்டில் ஒரு தரமான சம்பவம்! பான்-இந்தியா லெவலில் மிரட்ட வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘வவ்வால்’!

இருட்டில் ஒரு தரமான சம்பவம்! பான்-இந்தியா லெவலில் மிரட்ட வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘வவ்வால்’!

‘ஆன்டிமாண்ட்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குனர் ஷாமன் பி பரேல் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘வவ்வால்’ திரைப்படம், இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ‘காஸ்மிக் ஆக்‌ஷன் த்ரில்லராக’ உருவாகியுள்ளது! வவ்வால் எப்படி இரவில் இரை தேடி வெளியே வருமோ, அதேபோல் இரவில் உலவும் மனிதர்களின் மறுபக்கத்தை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் பக்கா ஆக்‌ஷன் ட்ரீட்டாக படமாக்கியிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகத் தயாராக இருக்கும் இந்தப் படத்தில், தமிழின் முத்துக்குமார், இந்தியாவின் மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங், சிறந்த நடிகர் மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோருடன் மலையாள நட்சத்திரங்கள் லெவின் சைமன், மணிகண்டன் என ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே கைகோர்த்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, 2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக ‘வவ்வால்’ களம் காணக் காத்திருக்கிறது!

Related Posts