’பாகுபலி’ நாயகனுக்கு ஜோடி யார்? அதிகராப்பூவ அறிவிப்பு

சென்னை: நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் அடுத்த படத்தை  தயாரிக்கிறது வைஜெயந்தி மூவிஸ்.  இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. வைஜெயந்தி மூவிஸ் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதைக் கொண்டாடும் விதமாக இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

நடிகர் பிரபாஸின் 21 வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கப் போவது உறுதியானது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் நடிகர் பிரபாஸ் திறமையை உலக அளவில் வியந்து பார்க்கப் பட்ட படமாகும். இந்தப் படம் 1500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய பாகுபலி. இந்தியிலும் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது.

இயக்குநர் நாக் அஸ்வின் 2015ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, நானி, ரிது வர்மா  டோலிவுட்டில் இயக்கியவர். தமிழில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ’நடிகையர் திலகம்’ மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கினார். இந்தப் படம் தேசிய விருதுகளைப் பெற்றது.  

டோலிவுட்டின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், தனது 50 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக  பிரபாஸின் 21வது படத்தை தயாரிக்கவிருக்கிறது.  இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.   

பிரபாஸுக்கு ஜோடி யார்? என பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இனியன்

Related Posts