பிரபல நடிகரின் பாராட்டு; ’ஓ மை கடவுளே’ மீண்டும் ஒரு ரவுண்ட்!
சென்னை; அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான படம் ’ஓ மை கடவுளே’. இந்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடியது.
ஊரடங்குக்கு முன்னதாக மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. லாக்டாவும் முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ’ஓ மை கடவுளே’ தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
இந்த படத்தில் கடவுளாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். அவர் கொடுக்கும் மேஜிக் டிக்கெட்டால் அசோக் செல்வன் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ ஆசைப் படுகிறார். ஆனால், அது விவாகரத்து வரை போய் நிற்கிறது. கடைசியில் தனது மனைவியின் காதலை புரிந்து கொண்டு அவரைப் பிரிவதை கைவிட்டு விட்டு மனைவியுடன் ஒன்று சேர்கிறார் இதுதான் இந்த படத்தின் கதை.ஊரடங்குக்குப் பின் ஆன்லைனில் வெளியான ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தை மீண்டும் ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ’ஓ மை கடவுளே’ சூப்பர் என்றும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் அழகாக ரசிக்கும் படியாக நேர்த்தியாக அமைந்துள்ளது. இயக்குநர் அஷ்வத் சூப்பர் நல்ல பண்ணிருக்கிங்க‘ அசோக் செல்வன் நீங்க இயல்பான நடிகர் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதப் பார்த்த அசோக் செல்வன், நிச்சயமாக இது தான் எனது ஓ மை கடவுளே தருணம். நான் உங்களது மிகப்பெரிய ரசிகன். உங்களது பாராட்டு எனக்கு உச்சாகத்த ஏற்படுத்தியுள்ளது. நன்றி சார் என ட்வீட் செய்துள்ளார்.