வெட்கப் புன்னகை’ புடவையில் கவர்ச்சி;’ அசத்தும் நந்திதா!
சென்னை;தமிழ் சினிமாவில் அட்டகத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், விஜய்சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மற்றும் முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகளின் மனதில் இடம்பிடித்தார் நந்திதா.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களைப் பெற்றுள்ளார் நந்திதா. அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, அவர் கதா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ’ஐபிசி 376’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வறவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.
கொரோனா ஊரடங்கில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்திவருகின்றனர் சினிமா பிரபலங்கள். அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாவில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நந்திதா. புடவை அணிந்து வெட்கப்புன்னகை, தேவதையாய், புடவையிலும் கவர்ச்சி காட்டமுடியும் என கண்களால் ரசிகர்களையும், இணையவாசிகளையும் கைது செய்து தள்ளாடவைத்துள்ளார் நந்திதா.
எஸ்.யாழினி சோமு