படுக்கையறை செல்பி! நடிகைகளுக்கு சவால் விட்ட நடிகர்!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோ பாலா. நாற்பதுக்கும் மேற்பட்ட ஏராளமான படங்கள்,சீரியல்களைக் கொடுத்தவர். கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் சினிமா பிரபலங்கள் செல்பி எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர் நடிகைகள்.
ட்விட்டர் வலைதளத்தில் நடிகைகள் போலவே’ ஆக்ட்டிவாக இருப்பவர் மனோ பாலா. தனது வித்தியாச மான போட்டோக்களை அவ்வப்போது ட்விட்டரில் ஷேர் செய்துவருகிறார்.
எந்த நடிகை,நடிகர்களுக்கு பிறந்தாள் என்றாலும் முதல் வாழ்த்து இவரதுதான். புதுபட ரிலீஸ், எதுவாக இருந்தாலும் வாழ்த்துச் சொல்லி சம்பந்தப்பட்டவர்களை உச்சாகப்படுத்துவார்.
தற்போது அவர் பெட்டில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு செல்பி எடுத்தப் போட்டோ சமூகவலைதளத்தில் கலக்கிவருகிறது. இந்த போட்டவை நெட்டிசன்கள் நடிகைகளைப் போலவே படிக்கையறையில்’ ’செம்ம’, சார். உயிருடன் இருக்கிறேன் என்று எழுதிபோடுங்க… என கலாய்த்துவருகின்றனர்.
இனியன்