ஓடிடியில் வெளியாகும் ’லாக்கப்’ அதிகாரப்பூரவ அறிவிப்பு

சென்னை; கொரோனா பரவலால் ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையில்  தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால்’ ஓடிடியில் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே ’பொன்மகள் வந்தாள்’, ’பெண்குயின்’ போன்ற படங்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகயிருந்த பல படங்கள் தற்போது ஓடிடியில் வெளிவரத் தொடங்கிவிட்டன.

அந்த வரிசையில் ‘லாக்கப்’ படமும் இணைய தளத்தில் வெளியாகும் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இந்தப் படத்தை நிதின் சத்யா தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகன் வைபவ்  நாயகியாக வாணிபோஜன் ,வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம்கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 14 வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்தப் படம் திகில் கலந்த கதையாக இருக்கும் என கூறியுள்ளனர்.

எஸ்.யாழினி சோமு

Related Posts