’பிஸ்கோத்’ ரகசியம் உடைத்த இயக்குநர்…!

சென்னை; வித்தியாசமான வேடத்தில் நடிகர் சந்தானம். ’ராஜபார்ட்’ திரைப்படத்தில் மூன்று வேடங்களில் ரசிகர்களுக்கு விருந்தாக நடித்திருக்கிறார் சந்தானம். இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரிப்பில் உருவான படம் ‘பிஸ்கோத்’ இந்தப் படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடத்தில் நடித்திருக்கிறர்.

 
இந்த அரசர் கதாப்பாத்திர காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.  ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பலம்பெரும் நடிகை செளக்கார் ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளர்.
இந்த படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன்;
இந்த ” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான  கதாப் பாத்திரமாக வருகிறது. ஆகவே இந்த படத்திக்கு ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம்.  சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும்.

 இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும்.இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார்.

நடிகர்கள்;

நாயகி  தாரா  

அலிஷா பெர்ரி

ஸ்வாதி முப்பாலா
ஆனந்தராஜ்

மொட்டை  ராஜேந்திரன்

சிவசங்கர்,லொள்ளு

முக்கிய கதாபாத்திரத்தில் செள்கார் ஜானகி நடித்துள்ளார்.

இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்திருக்கிறார்கள்.  ஒளி அமைப்பு ‘ 96’ படத்தின்  ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான்  இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன.

இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும் .மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாகவும் கொரோனா ஊரடங்கில் மனத அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு கலகலப்பான  படமாக இருக்கும் என்றார் இயக்குநர்.

எஸ்.யாழினி சோமு

Related Posts