தனுஷ் வெளியிட்ட ‘I Am Bad Bay’ பாடல்!

சென்னை; புதுமுக  இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ’மிருகா’ திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை  ஜாக்குவார் ஸ்டுடியோ தயாரிப்பு ந நிறுவனத்தின் கீழ் வினோத் ஜெயின் தயாரிப்பில் இயக்குநர் ஜே. பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இந்த திரைப்படம் மலைப்பகுதியான கோத்தகிரியில் மனிதர்களை  கொன்று வேட்டையாடும் புலி பற்றி சுவாரசியமான கதைக்களம் கொண்டதுதான்  இந்த திரைப்படம்.  படத்தின் நாயகன்  நடிகர் ஸ்ரீகாந்த் வனத்துறை அதிகாரியாக வருகிறார்.  அவருக்கு ஜோடியாக  நடிகை லட்சுமி ராய் நடித்திருக்கிறார். 2019 ஆகஸ்ட் மாதம் இறுதியில் டீஸர் இணையத்தில் வெளியாகியது.

இந்த படத்திற்கு   அருள் தேவ் இசையமைத்துள்ளார். ’மிருகா’ நாயகன் ஸ்ரீகாந்த், பிளாக் பாண்டி, தேவ் கில் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மிருகா  திரைப்படத்தின் இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்குனர் பாலா-வின் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது  ‘மிருகா’ படத்தில் உருவாகி உள்ள ‘Iam bad boy’ பாடல் வெளியாகியுள்ளது.

இந்த  படத்தின் பாடலை முன்னணி நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

இனியன்

Related Posts