யாருக்கு வட்டிக்கு விட்டார் ரஜினி?
வட்டிக்கு விட்டதாக தெரிவித்துள்ள ரஜினி, யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார்.
அதாவது, “முரளி பிரசாத், பிர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு கொடுத்தேன்,” என கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், “ரஜினியிடம் வட்டிக்கு வாங்கியவர்கள், திரைத்துறையில் வட்டிக்கு விடும் நபர்களைப்போலவே தோன்றுகிறது. அவர்கள் ரஜினியிடம் வாங்கி கூடுதல் வட்டிக்கு பிறருக்கு பணம் கொடுத்திருப்பார்கள் என நினைக்கத்தோன்றுகிறது.
ஆகவே, தன்னிடம் கடன் வாங்கியவர்கள் எதற்காக வாங்கினார்கள் என்பதையும் ரஜினி கூற வேண்டும். ஏனென்றால் திரைத்துறையை அழிப்பதே கந்துவட்டிதான். இதனால் தற்கொலைகள்கூட நிகழ்ந்துள்ளன. திரைத்துறையில் முன்னேறிய ரஜினி, அதீத வட்டிக்கு காரணமாக இருந்துவிடக்கூடாது என்கிற நல்ல நோக்கத்திலேயே இதைச் சொல்கிறோம்,” என்றனர்.