வட்டி: சட்டம் சொல்வது என்ன?
வட்டிக்கு விட்டு சம்பாதித்தாக நடிகர் ரஜினி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கந்துவட்டி குறித்தும் பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
கந்து வட்டி கொடுமையால், தற்கொலைகள் நடப்பதும் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து உயிரைவிட்டது.
திரைத்துறையிலும் கந்துவட்டி கொடுமை உண்டு. நடிகர் சசிகுமாரின் உறவினர், கந்துவட்டியால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்து உயிரைவிட்டார்.
கந்துவட்டி கொடுமையைப் போக்க, 2013ல், ‘அதீத வசூல் தடை சட்டம்’ தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, ஆண்டுக்கு, 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்றாண்டு கடுங்காவல் சிறை மற்றும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.
ரஜினியைப் பொறுத்தவரை, “2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கினேன். இதற்கு ரூ. 1.45 லட்சம் வட்டி கிடைத்தது,”என குறிப்பிட்டுள்ளார்.
இது 18 சதவிகிதத்துக்குக் குறைவானது என்பதால் கந்து வட்டி சட்டத்திற்குள் வராது.

