வட்டிகள் பலவிதம்!

டிகர் ரஜினி, வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பலவித கொடூர வட்டிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாள் வட்டி:

காலையில் க பெறும், 900 ரூபாயை, மாலையில், 100 ரூபாய் வட்டியுடன், 1,000 ரூபாயாகக் கொடுக்க வேண்டும்.

வார வட்டி:

10 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் நபருக்கு  8,500 ரூபாய்  அளிக்கப்படும். இதை, வாரம் தலா ரூ. 1,000 வீதம், 10 வாரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

ராக்கெட் வட்டி:

ரூ. 1,000 கடன் வாங்கினால், நாள்தோறும் ரூ. 100  வட்டி கட்ட வேண்டும்.  10வது நாளில் அசலான 1,000 ரூபாயை திருப்பி அளித்துவிட வேண்டும்.

கம்ப்யூட்டர் வட்டி:

1,000 ரூபாய்க்கு பத்தே நாளில், 1,000 ரூபாய் வட்டி கட்ட வேண்டும்.

இதர வட்டிகள்:

 8,000 ரூபாய்க்கு வாரத்திற்கு, 2,000 ரூபாய் வட்டி வசூலிப்பது, காலை, 6:00 மணிக்கு பணம் வாங்கினால், நான்கு மணி நேரத்தில், 15 சதவீத வட்டியுடன் பணத்தை வசூலிப்பது என பலவகை வட்டிகள் உண்டு.

ரஜினி வட்டி:

விஷயம் அறிந்தவர்கள், “ரஜினியைப் பொறுத்தவரை, 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கி  ரூ. 1.45 லட்சம் வட்டி வாங்கியதாக தெரிவித்துள்ளார். இது நியாயமான வட்டியே,” என்கின்றனர்.

 

 

 

 

 

Related Posts