ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ’’பூமி’’ திரைப்படத்தின் டீசர் !
கோமாலி படத்தின் மூலம் குழந்தைகளின் இதயத்தை கொள்ளை கொண்ட ஜெயம் ரவி. தனது 25வது படமான ’’பூமி’’ டீசர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். விவசாயத்தை மையப்பட்டுத்தி திரைக்கு வரக்காத்திருக்கும் ’பூமி’’ மிகப் பெரிய எதிர்ப்பார்பினை ஏற்படுத்தியுள்ளது.
ரோமியோ ஜுலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்ஷமன் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ’’பூமி’’ படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தின் வழியாக நிதி அகர்வால் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படத்தின் வில்லன் அஷுதோஷ் ராணாவிற்கு பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி பின்னணிக் குரல் கொடுத்திருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு; ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்திருக்கிறார்.
இசை; டி.இமான்
ஒளிப்பதிவு; டூட்லி
படத்தின் தொகுப்பாளர்; ரூபன் – ஜான் ஆப்ரகாம்
இந்த திரைப்படம் கோடைவிடுமுறையில் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் விருந்தாக வரவிருக்கிறது.
திரைப்படத்தின் டீசரை படக்குழு வினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்னைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் பேசும் படமாக பூமி உருவாக்கப்பட்டிருக்கிறது.
எதிர்பார்ப்பில் ’’பூமி’’