கொரோனா வைரஸ் பாதிக்காமல் தப்பிப்பது எப்படி?

கொரோனா பெயரை கேட்டாலே நம்மை அறியாமல் உடல் நடுங்கத்தான் செய்கிறது.கொரோனா வைரஸ் சீனாவை உருக்குழைய வைத்த கண்ணுக்குத் தெரியாத அசுரன் என்றே வர்ணிக்கத் தொன்றுகிறது. அதன் ருத்திர தாண்டவம் மெல்லமெல்ல பரவி அண்டை நாடு, மாநிலம் என அதன் பரப்பளவு விரிந்து இப்போது சென்னையில் நாளை என அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.

இந்த வைரஸ் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

வரும் வராது என்ற வடிவேலு பாணியில் நெடிசன்கள் சமூக வலைதளத்தில் பரப்பிவிடும் வீடியோக்கள் ஒருபுறம் இருக்க  நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

நாம் வெளியில் இருக்கும் போதும்,வீடு திரும்பும் போதும், கைகளை கைழுவாமல் முகம்,கண்,மூக்கு, வாய்,ஆகிய உருப்புகளைத் தொடக்கூடாது. இந்த உறுப்புகள் வழியாகவே அதிகம் பரவுகிறது.

 இருமும் போது கைகளை மூடாமல் இருக்கும் போது அதன் வழியாக மற்றவர்களுக்கும் பரவும்.

கைகளை சுத்தமாக்க வழக்கத்தை விடவும் அதிகநேரம் எடுத்து கழுவ வேண்டும்.

கைகழுவும் முறை;

  1. சோப் அல்லது கை கழுவும் திரவம் எடுத்துக் கொள்ளவும்.
  2. அதில் நன்றாக நுறைவரும் வரைத் தேய்க்க வேண்டும்.
  3. கையின் பின்புறமும் நன்றாக தேய்க்கவும்.
  4. விரல்களுக்கு இடையில், விரல் நுனியிலும் சுத்தம் செய்யவும்.
  5. உள்ளங்கை,மணிகட்டு மற்றும் கையில் மேல்புறத்தை மீண்டும் கழுவுங்கள்.
  6. பிறகு பயன்படுத்திய சோப்பை சுத்தம் செய்யுங்கள்.
  7. குழாயை மூடுவதற்கு டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும். அந்த பேப்பரை உடனடியாக குப்பை தொட்டியில் பொட்டுவிடவேண்டும்.

தொற்று பரவாமல் தடுக்கப்படும்.

குளிக்கும் முறை;

நாள் ஒன்றுக்கு இரண்டும் முறை குளிக்க வேண்டும். 

தண்ணீரில் சிரிது கல் உப்பு போட்டு  குளிக்கலாம்.

பெண்கள் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். இது மிகப் பெரிய கிருமி நாசுனி உடலில் இருக்க கூடிய கிருமியை அழித்துவிடும்.

யாரிடமும்  நெருக்கமாக நின்று பேசவேண்டாம்.

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள விட்டமின் சி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர்  திருத்தணிகாசலம்