“பாஜகவை வீழ்த்துவதற்கு எங்களிடம் 60% வாக்குகள் உள்ளது!”: காங். தலைவர் கார்கே  

“பாஜகவை வீழ்த்துவதற்கு எங்களிடம் 60% வாக்குகள் உள்ளது!”: காங். தலைவர் கார்கே  

புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கு எங்களிடம் (இந்தியா கூட்டணி) 60 சதவீத வாக்குகள் உள்ளதால், எளிதில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைக்கும் என்றும், மொத்தமுள்ள 28 ெதாகுதிகளில் 4 தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூறினார்.

இவரது இந்த பேச்சு, கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதைப் பற்றி கவலைப்படவில்லை. தேவகவுடா (ஜேடிஎஸ் தலைவர்), மோடி (பிரதமர்) ஆகிய இருவரும் கைகோர்த்து நிற்கும் படங்களையும் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன்.

ஒருவேளை அவர்கள் ஒன்றாக இணைய முயற்சி செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு வெல்லும். தேசிய அளவில் 60 சதவீத வாக்குகள் எதிர்க்கட்சிகளிடம் இருப்பதால், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எளிதில் வெற்றி பெறும். 60 சதவீத வாக்குகள் ஒன்று சேர்ந்ததால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்’ என்றார்.

Related Posts