விமல் நடிக்கும் கன்னிராசி: நவம்பர் 27 வெளியீடு!

கொரனா ஊரடங்கு காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன.

இந்த பட்டியலில் விமல் நடித்துள்ள கன்னிராசி படமும் இடம்பெற்றுள்ளது.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார். விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

 இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இயக்குநர் முத்துகுமரன், “காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது!” என்றார்.

 இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. மேலும் இம்மாதம் இறுதியில் குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னிராசி’ திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது.

 

Related Posts