மும்மொழி விவாதத்தை நிறுத்தியது பாஜக! ஹிண்ட் கொடுத்த அதே கட்சி பிரமுகர்!

மும்மொழி விவாதத்தை நிறுத்தியது பாஜக! ஹிண்ட் கொடுத்த அதே கட்சி பிரமுகர்!

விஜய் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ( மார்ச் 16 அன்று) ஒளிபரப்பாக இருந்த, மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதற்கு பாஜகவே காரணம் என்பதைச் சொல்வது போல அக்கட்சி பிரமுகரே கருத்து தெரிவித்து இருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை என்கிற திட்டத்தில், மும்மொழிக் கல்வி என்கிற பெயரில், இந்தியைத் திணிக்க ஒன்றிய பாஜக அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது. இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் கல்வி நிதியை தருவோம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

“ஒன்றிய கல்வி அமைச்சரின் செயல் சட்டத்துக்குப் புறம்பானது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் எதிர்வினையை பதிவு செய்தனர். மேலும், ஒன்றிய அரசு ஒதுக்க மறுத்த நிதியை, மாநில அரசே ஒதுக்கியது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நேற்று முன்தினம், மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக விவாதம் ஒளிபரப்பாக இருந்தது. இது குறித்த விளம்பரங்களும் வெளியாகின.

ஆனால் அதற்கு முன்தினம் சனிக்கிழமை இரவு, இந்த விளம்பரம் நிறுத்தப்பட்டது. மறுநாள் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக வேறு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

“தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பு எதிராக இருக்கிறார்கள். இந்த நிலையில், குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசுதான் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து நிறுத்தி இருக்கிறது” என்று சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகரான பாஜக பிரமுகரான அலிசா அப்துல்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, சமூகவலைதளத்தில் பரவி வரும் கருத்து உண்மை என்பது போல இருக்கிறது.

அந்தப் பதிவில் அலிசா, “அன்று நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று அழைத்தார்கள். நிகழ்ச்சி குறித்து எனக்குத் தெரிந்த மீடியா நண்பரிடம் விசாரித்தேன். அவர், ‘இது திமுகவின் ஸ்கிரிப்ட்.. நிகழ்ச்சியை தமிழ் VS இந்தி என்று எடுத்துச் சொல்வார்கள்.

நிகழ்ச்சியில், மும்மொழிக்கு ஆதரவாக ஒரு பெண் பேசுவார். அவரை நன்றாக பேச விடுவார்கள். இரண்டாம் பகுதியில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அந்தப் பெண்ணின் தந்தையே பேசுவார். அப்போது அவர், ‘இத்தனை வருடம் உன்னை இந்தி படிக்க வைத்தேன்..
விடியற்காலையில் தனியார் இந்தி வகுப்பிலும் இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்து படிக்கும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வைத்தேன். இப்போது கல்லூரி வரை வந்து விட்டாய். ஆனாலும் இந்தி ஒரு வார்த்தை கூட பேச தெரியவில்லை’ என்று மடக்குவார்.இதனால் மூன்றாவதாக ஒரு மொழியை படிப்பதினால் எந்த ஒரு பலனும் இல்லை என்று நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள் சொன்னார் அந்த நிகழ்ச்சியை நான் தவிர்த்து விட்டேன்” என்று பதிவிட்டு உள்ளார் பாஜக அலிசா.

“பாஜக பிரமுகரான அலிசா இப்படி பதிவிட்டதன் மூலம், ஏற்கெனவே நிகழ்ச்சி குறித்து ஒரு கருத்து வைத்து இருக்கிறார் என்பதும், இதே போன்ற எண்ணத்தில் உள்ள பாஜகவினர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்கக் காரணமாகி விட்டார்கள் என்றும் உறுதியாகிறது” என்று தற்போது சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல, ஜியோ நிறுவனத்தின் விஜய் பயந்துவிட்டது என்கிற கோணத்திலும் பலர் கருத்திட்டு வருகிறார்கள்.

Related Posts