விஜய் சேதுபதி-பாத்திபன் கலக்கல் அரசியல் கூட்டணி! எதிர்பாப்பில் ரசிகர்கள்
சென்னை; வித்தியாசமான நடிப்பு திறமையால் தனக்கு என தனியிடத்தைப் பிடித்திருக்குறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அடுத்து ஒரு புதிய கோணத்தில் அவரைப் பார்க்கத் தயாராகிறார்கள் ரசிகர்கள். அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.
டெல்லி பிரசாத் தீனதயாளன் தனது இயக்குநர் பயணத்தை அரசியல் களம் மூலம் தொடங்குகிறார். எப்போதுமே ஹீரோ என்ற இமேஜுக்குள் சிக்காமல் இருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். எதிலும் புதுமை விரும்பியான பார்த்திபன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – பார்த்திபன் கூட்டணி இந்தப் படத்தின் இணைகிறது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றிக் கோட்டைத் தொடும் என படக்குத் தொரிவித்துள்ளது.
இனியன்