’’மாஸ்டர்’’ ஓடிடியில் வெளியாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை; கொரோனா ஊரடங்கால் முடங்கியிருக்கிறது மக்களின் வாழ்க்கை. இதில் சினிமா துறையும் பாதிப்படைந்துள்ளது. திரையில் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், முதன் முதலில் ஓடிடியில் ’பெண்குயின்’ படம் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தப் படம் கூறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வாய்திறந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். முதன் முறையாக விஜய், விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக தயாராக இருந்த வேலையில் ஊரடங்கு போடப்பட்டது. அதனால் படம் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தள்ளிப் போனது.
ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு தற்போது மீண்டும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மீண்டும் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுயிருப்பதால் பல படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோன்று ஓடிடி தளத்தில் ’’மாஸ்டர்’’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிவருகிறது. ஆனால் படக்குழுவினர் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
இந்த சூழ்இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ படத்தின் ரிலீஸ் குறித்து வாய்திறந்திருக்கிறார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது அதனால் இந்தப் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கைப் பொறுத்தே படம் ரிலீஸ் பற்றி தகவல் அறிவிக்கப்படும். அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெளிவாகத் தெரியவில்லை’ என்றும் விஜயின் மாமாவும் தயாரிபபாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
இனியன்