விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ கதை என்ன?

மக்கள் செல்வன் என ரசிகர்ளால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. தனது இயல்பான நடிப்புதிறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமிபத்தில் வெளியான ’க/பெ ரணசிங்கம்’, படம் பெரிதும் பேசப்பட்டது.  ’யாது ஊரே யாவரும் கேளிர்,’ ‘துக்ளக் தர்பார்’ என வரிசையாக நடித்துவந்தார்.  கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதனால் ’துக்ளக் தர்பார்’  படப்பிப்பானது பாதியில் நிறுத்தப்பட்டது.

புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில்  ஆர். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நடிகர்கள்  அதித்திராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் கருணாகரன், பாக்ஸ் பெருமாள், உள்ளிட்ட  பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் வேலை 50% முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மிகப் பிரம்பாண்டமான பெரும் பொருட்செலவில் உருவாகிறது.  இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.  விஜய் சேதுபதியின் ’96’ படத்திற்கு இசையமைத்த  கோவிந்த் வசந்தா இப்படத்தில் இணைகிறார்.

தற்போது படக்குழு படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ’நானும் ரவுடிதான்’ படத்திற்குப் பிறகு பார்த்திபன், விஜய் சேதிபதி இணைந்து நடிக்கும் இந்தப் படம் முழுக்க அரசியல் பின்னனி கொண்ட கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

எஸ்.யாழினி

Related Posts