’’காக்டெய்ல்’’ திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.  சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும்  காமெடியன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.  வெறும் காமெடியனாக மட்டுமின்றி சோலோ ஹீரோவாகவும் பல காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு இருப்பதால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. அந்த வரிசையில் யோகிபாபு ஹீரோவாக நடித்த ’காக்டெய்ல்’ ஓடிடியில் வெளிவந்தது.

நடிகர்கள்; யோகிபாபு

மிதுன் மகேஷ்வரன்

ராஷ்மி கோபிநாத்

பாலா

இயக்கம்; ரா.விஜயமுருகன்

இசை; சாய் பாஸ்கர்

கதைச்சுருக்கம்;

சோழர் காலத்தில் செய்யப்பட்டு முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் தேடுதல் வேட்டை நடத்துகிறது. இது ஒருபக்கம் என்றால் யோகி பாபு, பாலா,ராஷ்மி கோபிநாத், மிதுன் மகேஷ்வரன் ஆகியோர் நண்பர்கள். இவரகள் காக்டெய்ல் பார்ட்டி மிதுன் வீட்டில் கொண்டாடுகின்றனர். குடித்த மயகக்த்தில் எழுவதற்கு காலை விடிந்துவிடுகிறது..

எழுந்து  பார்த்தால் அவர்கள் ரூமில் ஒரு பெண் இறந்த கிடக்கிறாள்.

 அதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள். அந்த பெண் எப்படி இங்கு வந்தாள், அவரது பிணத்தை எப்படி அப்புரப்படுத்துவது என்று யோசிக்கிறார்கள். இரவு வரை காத்திருந்து இறந்த பெண்ணை மூட்டையாக கட்டி நள்ளிரவில் காரில் எடுத்து செல்கின்றனர். அப்போது காணாமல் போன முருகன் சிலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார் மிதுன் வருங்கால மாமானாரான சாயாஜி ஷிண்டே. இவரிடமே காணாமல் போன பெண் பற்றிப்புகார் வருகிறாது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

நகைச்சுவை கதையாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர். யோகி என்ன சொன்னாலும் சிரிக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ரசித்துச் சிரிக்கும்படியாக இன்னும் சில காட்சிகள் வைத்திருந்திருக்கலாம்.

எஸ்.யாழினி

Related Posts