விஜய் ஆண்டனியின் புதிய வரவு!

நடிகர் விஜய் ஆண்டனி  படம் என்றாலே  மாறுபட்ட தலைப்பு,  வித்தியாசமான நடிப்பு  என ரசிகர்களை எதிர்ப்பார்ப்பில் வைத்திருப்பார். மீண்டும் ஒரு எதிர்பார்புடன் இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

 செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியிருக்கிறது .

காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களைத்  தயாரித்த TD ராஜா அடுத்து  தயாரிக்கும்  ராஜவம்சம்  திரைப்படம் விரைவில்  வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து  இன்னும்  பெயரிடப்படாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .
இயக்குநர்” மெட்ரோ ” பட புகழ்   ஆனந்த கிருஷ்ணன்.இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .

த்ரில்லர் படமான ’’உரு’’ படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இதற்க்கும்  இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு ;N .S உதயகுமார்

இணை தயாரிப்பு; ராஜா சஞ்சய் .

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. விரைவில்’’ விஜய் ஆண்டனியை ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம்.

Related Posts