அழுத்தமான கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி!

 வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான பொறியாளன் திரைப்படம் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் ஆனந்தி. பின்னர் இவர் பிரபு சாலமனின் கயல் படத்தில் எதார்த்த நடிப்பில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நடித்த கயல் ஆனந்தி, பரியேறும் பெருமாள், ஆகிய படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது அவரது  நடிப்பின் புது வரவான ’’கமலி ஃபிரம் நடுக்காவேரி’’ வரும் 14 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. திரைப்படம் வரும் ஏப்ரல் 17ல் திரைக்கு வரவுள்ளது.

கயல் ஆனந்தியின் நடிப்பு;

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லுரி வயது. நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் மறுபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்  தான் கமலி. அவள் இந்த  இரண்டையும்  அவள்  அடைந்தாளா இலலைய என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’.

ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை.

புதுமுக இயக்குநர் ராஜசேகர் புதுமுகங்களை  நம்பி எடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை உலகமெங்கும் மாஸ்டர்பீஸ் வெளியீடுகிறது.

கதை,திரைக்கதை,வசனம் & இயக்கம்:ராஜசேகர் துரைசாமி
இசை:தீனதயாளன்
ஒளிப்பதிவு:ஜகதீசன் லோகயன்
எடிட்டிங்:R.கோவிந்தராஜ்
கலை:தியாகராஜன்
பாடல்கள்:யுகபாரதி,மதன்கார்க்கி
நடனம்:பப்பி,சதீஷ் கிருஷ்ணன்

நடிகர்கள்;

இதில் கமலி என்ற கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Related Posts