பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் டைட்டில் ’’லிப்ட்’’
ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ’’லிப்ட்’’ படத்தை ஹேப்ஸி தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பிரபலமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழியாக தமிழ்நாட்டின் மக்களுக்கு அறிமுகமானவர் கவின். இவர் சின்னத்திரையில் அறிமுகமாயிருந்தாலும் அவ்வளவாக பேசப்படவில்லை. பிக்பாஸ் மூலமாகத்தான் தனக்கு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் ’’லிப்ட்’’. கவின் ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக் மிரலவைக்கிறது. டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள்.
ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும் என ’’லிப்ட்’’படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் கேமராமேனாக S யுவா.
பாடல்’ பின்னணி இசை; மைக்கேல் பிரிட்டோ
இறுதிச்சுற்று சண்டைக்காட்சிகளை அமைத்த ஸ்டன்னர் சாம் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார்.
படம் ஜானர், திரில்லர் வகையைச் சார்ந்தது.படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்து உள்ளாதாகவும் தொடர்ந்து படத்தின் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயப்படுர மாதிரி போட்டோ போட்டுட்டு பாசிட்டி எனர்ஜியா? ரசிகர்களின் மையிட் வாய்ஸ்’’