’’கரோனா’’ உயிர் பலி தடுக்கப் போராடும் மருத்துவர்!
கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் தொடங்கிய இப்போது அனைத்து நாடுகளிலும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதும் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேர். இந்தியாவுக்கு கொரோனா பரவாது, இந்த வெப்பத்தில் கொரோனா உயிர் வாழாது என்று சொல்லி வந்தநிலையில், இதையும் தாண்டி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த ஜனவரி 27ம் தேதி டாக்டர் க.திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக எல்லா ஊடகங்களுக்கும் அறிவித்தார். நமது இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். பிறகு அவருக்கு சீனா அரசாங்கம் அதிராகப் பூர்வ அழைப்பும் விடுத்தது. இந்த தகவல்களையும் வெளியிட்டோம்.
தொடர்ந்து அவர் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்து அதை மக்களுக்கு கொண்டு சொல்ல போராடிவருகிறார். இதைத் தடுக்கும் வகையில் சிலர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்தனர் பல பிரச்னைக்கு பிறகும் தனது கோரிக்கையை தொடர்ந்து கூறிக் கொண்டு தான் இருக்கிறார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே மருத்துவமனைக்கு கொண்டுவாருங்கள். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்கட்டும் அந்த மருந்துடன் சேர்த்து நான் கொடுக்கும் மருந்தையும் எடுத்துக்கொள்ளட்டும். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் வராது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பண்புகள் மூன்று நாட்களில் மாறி இந்த நோயால் ஏற்படும் உயிர் இழப்புகள் தடுக்கப்படும். மேலும் இது பரவாமல் தடுக்க முடியும் என்றார்.
எனக்கு பத்து நாட்கள் கொடுங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளை குணமாக்கிவிடுவேன் என்றார்.
நான் பல நாடுகளுக்கு சென்று வருகிறேன் இந்த நோயினால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறேன். கரோனா மருந்தை நானும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறேன். என்னை அனுமதியுங்கள். இங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் வார்டுக்கு எனக்கு அனுமதி கொடுங்கள். இதனால் என் உயிருக்கு வரும் ஆபத்திற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்.
எனக்கு ஒரு 5 நோயாளிகளை கொடுங்கள். 48 மணி நேரம் காலஅவகாசம் தாருங்கள். நான் அந்த மருந்துகளை சாப்பிட்ட பின்பே நோயாளிகளுக்கு கொடுக்கிறேன். மத்திய அமைச்சர் முன்பாக அந்த மருந்தை நான் சாப்பிட்டு காட்டினேன். பிறகு மத்திய அமைச்சரும் அதை சாப்பிட்டு பார்த்தார். நான் சிகிச்சை கொடுக்கும் நோயாளிகளை 48 மணிநேரம் கழித்து பரிசோதனை செய்யுங்கள். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும் அப்படி இருந்தால் அனைத்து நோயாளிகளையும் என்னிடம் அனுப்புங்கள்.
மாஸ்க் அணிவதால் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது. நான் கூறிய மருந்தை தற்போது சீனா பயன்படுத்திவருகிறது. நானும் மூன்று மாதங்களாக, கரோனா வைரஸால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்து என்னிடம் உள்ளது என்று கூறி வருகிறேன். உயிரைக் காப்பாற்ற போராடிவருகிறேன். அதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றார் உயிரைக்காக்க போராடும் மருத்துவர்.
டாக்டர் க.திருத்தணிகாசலம்