நீர், ஊர், போர்!  “கன்னி மாடம்” போஸ் வெங்கட்டின் அடுத்த படைப்பு!

னைவரின் பாராட்டுகளையும் பெற்று வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் புதிய படத்தை இயக்குகிறார்.

‘மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில்  ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் குறித்து போஸ் வெங்கட் தெரிவித்ததாவது:“

 ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்று ஒரு கணிப்பு உண்டு. இக்கணிப்பை புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமாக உருவாக்க உள்ளேன்”

இவ்வாறு போஸ் வெங்கட் கூறினார்.

‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைகதை-வசனம் எழுதுகிறார்.  

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

இதர நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.