“இந்தி தெரிஞ்சா நல்லது!”:  ‘மொத ராத்திரி’ ஹீரோயின் வர்ஷினி!

“இந்தி தெரிஞ்சா நல்லது!”:  ‘மொத ராத்திரி’ ஹீரோயின் வர்ஷினி!

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் காலேஜ்ல இயற்பியல் (Physics) படிச்சுக்கிட்டு இருந்த பொண்ணு, இன்னைக்கு சினிமா திரையில தன்னுடயை நடிப்பால ‘Physics’-ஐயே தலைகீழா மாத்தி எழுத வந்துட்டாருனா பாருங்களேன்! ‘மொத ராத்திரி’ திரைப்படத்துல ‘ரம்யா’ங்கிற அழுத்தமான கதாபாத்திரத்துல நடிச்சு, மொத்த பேரோட கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்காரு நம்ம வர்ஷினி கார்மேகம்!ஆரம்பத்துல ஷார்ட் ஃபிலிம்ஸ், மேடை நாடகங்கள்னு குட்டி குட்டி காலடிகள் எடுத்து வச்ச வர்ஷினிக்கு, நடிப்பு மேல இருந்த காதல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே போயிருக்கு. இதுக்கு நடுவுல அவரோட கலைப் பயணத்துல மாஸ் என்ட்ரி கொடுத்தது நம்ம பாரம்பரிய பரதநாட்டியம்தான்! முத்திரைகள் மூலமா உணர்ச்சிகளை அள்ளித் தெளிக்கிறது, உடம்பை வில்லா வளைக்கும் கட்டுப்பாடு, நளினமான பாடி லேங்வேஜ்னு எல்லாத்துக்கும் இந்த நாட்டியம்தான் வர்ஷினிக்கு ரொம்பவே ஸ்ட்ராங்கான ஃபவுண்டேஷனை அமைச்சு கொடுத்திருக்கு. அப்புறம் என்ன? கேமரா முன்னாடி நின்னா பயந்து ஓடின காலம் போய், கெத்தா நின்னு தன்னம்பிக்கையோட பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு!

நம்ம ஆளுக்கு தமிழ் சினிமா மட்டுமில்ல, இந்தி சினிமா மேலயும் செம கிரஷ் உண்டு! கேமராவுக்கு முன்னாடி சும்மா வந்து நாலு வசனத்தைப் பேசிட்டு போறதை விட, கதாபாத்திரமாவே வாழ்ந்து காட்டுற தபு, ரேகா, ஐஸ்வர்யா ராய், ஷோபனா போன்ற ஆல்-டைம் லெஜண்ட்ஸ் நடிகைகள்தான் இவருக்கு பெரிய ரோல் மாடல்களாம்! அதுமட்டுமில்லாம, இந்தி மொழியை ரொம்பவே துல்லியமா படிக்கவும், நச்-னு உச்சரிக்கவும் கத்து வச்சிருக்காரு வர்ஷினி. “இன்னைக்கு ஓடிடி காலம் பாஸ்! ஒரே மொழிக்குள்ள சுருங்கிடாம, எல்லைகளைத் தாண்டி கண்டென்ட் தேடிப்போற காலத்துல, இந்தி தெரிஞ்சிருக்கிறது ஒரு ஆர்ட்டிஸ்ட்டா எனக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிடும்!”னு செம கிளவரா பேசுறாரு.

இன்னைக்குத் திரையுலகத்துல கலக்கிட்டு இருக்கிற நடிகர்கள்ல, நம்ம சாய் பல்லவியோட அந்த அசல் இயல்பான நடிப்பும், நடிப்பு அசுரன் தனுஷோட வெறித்தனமான பன்முகத்தன்மையும், கதாபாத்திரத்துக்காக ஆளையே மாத்திக்கிற அந்த அர்ப்பணிப்பும்தான் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்-னு மனசு திறந்து சொல்றாரு! அப்படியே மியூசிக் பக்கம் வந்தா, இளையராஜா சாருடைய ஆன்மீக இசைக்கும், யுவன் சங்கர் ராஜாவோட வெறித்தனமான பிஜிஎம்க்கும் இவர் பயங்கரமான கன்னி ஃபேன்!

Related Posts