ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற வரலட்சுமியின் ‘ராஜபார்வை’ ட்ரெய்லர்..!


சாய்
சமரத் மூவிஸ் சார்பில் பாபு ரெட்டி மற்றும் ஜெயபிரகாஷ் தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘ராஜபார்வை’.. ஜேகே இயக்கியுள்ள இந்த படம் ஒரு க்ரைம் ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.. பார்வை தெரியாத ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சவாலான சம்பவங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். 

இந்த படத்தில்  பிளாக் பாண்டி, தலைவாசல் விஜய், ரவி காலே, பரத் ரெட்டி, சுமித்ரா, ராஜேஷ் மற்றும் கண்ணன் துளசிராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: மேத்யூஸ்,  படத்தொகுப்பு : வெங்கி.  விரைவில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
 
இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது..

Related Posts