திரௌபதி படத்தில், டாக்டர் அன்புமணி?
பாராட்டுகள் – கடும் விமர்சனங்கள் என கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, மோகன் ஜி இயக்கியுள்ள, “திரௌபதி” திரைப்படம். தமிழகத்தில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில், சாதி வெறி பிடித்த வில்லன் கதாபாத்திரம், வட மாநிலத்தைச் சேர்ந்த தலித் கட்சித் தலைவர் ஒருவரை குறிப்பிடுவதாக உள்ளது என்ற கருத்தும் பரவி வருகிறது.
நாயகனாக ரிஷி ரிச்சர்ட் நடித்துள்ளார். “நாடகக் காதலை எதிர்த்து புரட்சி செய்ய வேண்டும்” என முழங்கும் இவரது கதாபாத்திரம், பா.ம.க. இளைஞணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாக, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள், “ரிஷி ரிச்சர்ட், பார்ப்பதற்கு அன்புமணியைப் போலவே இருக்கிறார். அன்புமணி பேசும், காதல் நாடகம் குறித்து பேசுகிறார். அதே போல இயற்கையை காக்க வேண்டும், நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று போராடும் தனது மனைவிக்கு உதவியாக நிற்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அன்புமணி போலவே பல காட்சிகளில் ரிஷி கதாபாத்திரம் தொப்பி அணிகிறது. பார்ப்பதற்கு சட்டென அன்புமணி போலவே இருக்கிறது. தவிர இடையில் அன்புணி தாடி வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!” என்கின்றனர்.