கன்னிமாடம்: திரை விமர்சனம்

கருத்தியல் ரீதியாக வலுவான படம். இடைநிலைச் சாதி இளைஞர்கள்/இளைஞிகள் தங்கள் குடும்பங்களில் நிலவும் சாதி இறுக்கம் குறித்து பேசி, குடும்பத்தினரைத் தெளிய வைக்க வேண்டிய அவசியத்தை இப்படம் உணர்த்துவதாகக் கருதுகிறேன்.

பெரிய குற்றங்கள் சுமத்திவிட இயலாதவாறு பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கரிசனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே காட்சியில் போலிஸாக வரும் மைம் கோபி பாத்திரம் கைத்தட்ட வைக்கிறது என்றால், வீட்டு உரிமையாளர்  அழகு ராணியாக வரும் பிரியங்கா – ரோபோ சங்கரின் துணைவி என சொன்னார்கள்- விசில் பறக்க வைக்கிறார். “சாதி பேரைச் சொல்லினு யாராச்சும் இங்க வந்தா அவ்ளோதான்” என பேசும் காட்சி அட்டகாசம்.

படம் நெடுகிலும் தென்படும் பெரியார், பாபாசாகேப், மார்க்ஸ் உள்ளிட்ட புரட்சியாளர்களின் படங்கள் இயக்குனர் போஸ் வெங்கட்டின் சமூக அக்கறையைக் காட்டுகின்றன. பாராட்டுகள்.

இயக்குனர் போஸ் வெங்கட் ஐம்பதைத் தொடுபவர் என கணிக்கிறேன். பழைய பள்ளிக்கூடம்.  பல இடங்களில் வரும் 80, 90 களின் அழுகாச்சிகள் அதை மெய்ப்பிக்கின்றன. அவற்றைத் தவிர்த்து காட்சிகளை நவீனமாக உருவாக்கியிருந்தால் மறக்கவியலாத படமாக இருந்திருக்கும். எனினும்,

சமகாலத்து சமூக கொடுமையைப் பேசியதற்ககாகவே இயக்குனர் போஸ் வெங்கட்டுக்குப்  பாராட்டுகள். 

படம், வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கும் முன்னரே சிறப்புக் காட்சி திரையிட்டிருந்தால் இன்னும் பலருக்குச் சென்று சேர்ந்திருக்கும். சமூக  அக்கறையாளர்கள் இப்படத்திற்குத்  தங்கள் பங்களிப்பைத் தர வேண்டிய கடமை இருக்கிறது.

_ திருவாசம் அவர்களின் முகநூல் விமர்சனம்

Related Posts