”தி.மு.க.வில் நடிகர் பிரபு!” என்கிற வாட்ஸ்அப் பதிவுகள் உண்மையா?
தி.மு.க வில் நடிகர் பிரபு இணைகிறார் என்ற தலைப்புடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் பிரபு பூ கொத்து கொடுப்பது போன்ற போட்டோ சமூகவலைதளத்தில் வலம் வருகின்றன.
இந்த போட்டோ எல்லா வலைதளத்திலும் பகிரப்பட்டு தேவையில்லாத பொய்யான தகவலை பரப்பி வருகிறது.
இதில் உண்மை என்ன என்பதைப்பற்றி பார்க்கலாம். நடிகர் பிரபு 6.03.2020 அன்று திறக்கப்படவுள்ள ‘’சாந்தி காம்ப்ளெக்ஸ் திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென , நடிகர் திரு. பிரபு அவர்கள் குடும்பத்தின் சார்பாக திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இப்போது நெட்டிசன் கையில் கிடைத்து தனக்கு தோன்றியதை பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஒரு போடோ எடுத்தது தப்ப என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா.