ஆத்தி நம்ம ரெஜினாவ இது சூர்ப்பனகை..!
கதைக்கு முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்பும் நயன்தாரா,ஜோதிகா,த்ரிஷா வரிசையில் நம்ம ரெஜினாவும் கலம் இறங்கியிருக்கிறார்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிப்பில் உருவாகிவரும் படம் தான் சூர்ப்பனகை. இந்த படத்தில் கதாநாயகியாக ரெஜினா மிரட்டல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர்கள்;
மன்சூர் அலிகான்,கிஷோர்,அர்ச்சனா கவுடா உள்ளிட்டோர் பலர் நடிகின்றனர்.
இந்தப் படத்தி கார்த்திக் ராஜு இயக்கி வருகிறார். இது சரிந்த்திரம் கலந்த ஒரு திகில் படமாக உருவாகிறது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜசேதுபதி வெளியிட்டார். இந்தப் படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரெஜினாவை பார்க்கப் போகிறார்கள். படத்தின் போஸ்டர் ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதிகாலத்தில் தவறு செய்தவர்களை கழுவேற்றி தண்டனை நிறைவேற்றும் பழக்கம் இருந்தது அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதை உருவாகிறது. மனதில் காதல் வைத்து அதைச் சுற்றி நடக்கும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ரெஜினா நடித்திருக்கிறார்.
இதன் படபிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் திரையில் வெளியாகிறது.