மனிதநேய மையத்தில் படித்த  71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி

மனிதநேய மையத்தில் படித்த  71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. 979 காலி பணியிடங்களுக்காக  10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் சென்னையில் மட்டும் மொத்தம் 69 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 24,364 பேர் முதல் நிலை தேர்வை எழுதியிருந்தனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ் ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 979 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் பெருநகர சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் கீழ் இயங்கும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும். மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்களில் 71 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்கள்  மாணவர்கள் 57 பேர்,மாணவிகள் 14 பேர்  என மொத்தம் 71  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான நேரடி வகுப்புகள், பயிற்சிகள்,வல்லுனர் குழு ஆலோசனை மற்றும்  இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தகுதியின் அடிப்படையில் தங்குவதற்கான விடுதி, உணவு உள்ளிட்ட அனைத்தும்  இலவசமாக வழங்கப்படும் என, மனிதநேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்,இன்று முதல் சி.ஐ.டி. நகரில் உள்ள பயிற்சி மையத்தில் நேரிலோ, 044 24358373, 24330095, 9840439393, 84284 31107, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts