‘லேண்டர் – ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை!:  இஸ்ரோ

‘லேண்டர் – ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை!:  இஸ்ரோ

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ,  நிலவின் தென் பகுதியை ஆராய  கடந்த ஜூலை 14 ஆம் தேதி, பிரக்யான் ரோவர் செயற்கைக்கோளை சந்திரயான் – 3 ராக்கெட் மூலம் அனுப்பியது.

நிலவில் இறங்கிய, ரோவர் அங்குள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மைகளை பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது; மேலும் இது குறித்த வீடியோவை வெளியிட்டது.

பிரக்யான் ரோவர் 14 நாடகள் ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்பாடு குறித்து இஸ்ரோ, “ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. ஸ்லீப் முறையில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை இயக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.