உலக திரையரங்கங்குகளில் ’ட்ராப் சிட்டி’ வெளியாகிறதா..?
நடிகர் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் சசியின் இயக்கத்தில் சித்தார்த்துடன் இணைந்து ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஹாலிவுட்டில் தயாராகும் ‘ட்ராப் சிட்டி’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்ககிறார் என்ற தகவல் ஏற்கனவெ வெளியானது. இதனால் முதல் முதலாக ஹாலிவுட்டில் நடிக்கிறார் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
‘ட்ராப் சிட்டி’ என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காட்டும் திரைப்படமாகும். மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதைதான் இது.
இந்தப் படத்தை ரிக்கி பர்ச்சலின் இயக்குகிறார். இந்தப் படத்தை டெல் கே. கனேசன் தயாரிக்கிறார். அவர் ஏற்கனவே ‘டெவில்ஸ் நைட்’ திரைப்படத்தை KYBA பிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் நெப்போலின் நடித்துள்ளார். அவரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=Tjvdg4QBXS8&feature=youtu.be
’ட்ராப் சிட்டி’ படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி. ஜாக்ஸன் தனது
படத்தை இந்தியாவில் வெளியிடுவதிலும், ஜிவி பிரகாஷ் தான் ஹாலிவுட்டில்
நுழைவது குறித்தும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றே கூறவேண்டும்.’’
மேலும் ’ட்ராப் சிட்டி’ படத்தை உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளபட்டுவருவதாக படகுழு தெரிவித்திருக்கிறது. அதற்க்கான அதிகார பூர்வ தகவல் கொரோனா தாக்கத்தை ப் பொருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
யாழினி சோமு