எஸ்.டி.ஆர். : மரபியல் மருத்துவம் பேசும் புதிய திரைப்படம்
நிர்மலா தயாரிப்பு நிறுவனம் உருவாக்கத்தில், அறிமுக இயக்குனர் தமிழ் சிலம்பரசன் இயக்கும் புதிய படத்திற்கு, ‘எஸ்.டி.ஆர்.’ என பெயரிடப்பட்டு உள்ளது.

படம் குறித்து இயக்குனர் தமிழ் சிலம்பரசனிடம் கேட்டபோது, “கொக்கெயன் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை, அப்பழக்கத்தில் இருந்து மீட்டது மிக மிக சிரமமான ஒன்று. அதே போல, செல்போனுக்கு அடிமையானவர்களையும் மீட்பது கடினம். இந்த மனநிலையை, ‘டிஜிட்டல் பிஹேவியரில் அடிக்சன்’ (Digital behavioural addiction) என்பார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் உச்சகட்ட மனநோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையை மிரட்டும் கொடூரனாக இருக்கிறது, இந்த டிஜிட்டல் பிஹேவியரில் அடிக்சன்.
அப்படி பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவனை ஸ்டீபன் மிக்கேல்ராஜ் – திருக்குமரன், – ரியாஸ் அகமது ஆகிய மூவர் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பதே கதை. இந்த மூவர் பெயர்களின் முதல் எழுத்தே தலைப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கதை கற்பனையாக புனையப்பட்டது என்றாலும், இளைஞர்களுக்கு பாடமாகவும் இருக்கும். தவிர தமிழ் மரபில் வந்த ஒரு சிகிச்சை முறை குறித்தும் இதில் கூறியிருக்கிறோம்!” என்றார்.
யாழினி சோமு