எஸ்.பி பாலசுப்பரமணியன் உடல் நலன் குறித்து எஸ்.பி சரண் விளக்கம்

சென்னை; கொரோனா வைரஸ்  தொற்று சமீபகாலமாக  திரைப்பிரபலங்களை அச்சுருத்தி வருகிறது. அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர்  இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். அந்த வரிசையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியது. சமூக வலைதளங்களில் அவர் நல பெற்று வரவேண்டும் என்று  பலரும் பதிவிட்டு வந்தனர்.

 தற்போது அவரது உடல் நலம் குறித்து எஸ்.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார்.

அன்புள்ள ஊடக மற்றும் சக திரைப்பட  நண்பர்களுக்கு,

என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார் அவரது மகன் சரண்.

யாழினி சோமு

Related Posts