நெல்லை அலைமோதும் கூட்டம்..! பட்டணம் பொடி கிடைத்ததால் மகிழ்ச்சி..!
நெல்லை; கொரோனா காலகட்டத்தில் ஊரடங்காள் கடைகள் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் கூட்டம் ஒருபக்கம் என்றால் நெல்லை மாவட்டத்தில் பட்டணம் பொடிக்கு என தனி பட்டாளமே உண்டு. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றால் அவர்கள் வீட்டில் பூட்டி, தாத்தா, ஆச்சி. என பாகுபாடுயின்றி இருதரப்பினரும் மூக்குப்பொடி[ பட்டணம் பொடி] போடுபவர்கள் கட்டிப்பாக இருப்பதைப் பார்திருப்பார்கள். ஊடரங்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. டீகடை முதல் பொட்டிகடை, மற்றும் பெரிய கடைகள் மூடப்பட்டன. இதில் பட்டணம் பொடி கடைகளும் தப்பவில்லை. ஊரடங்காள் சென்னையில் இருந்து வரவேண்டிய பட்டணம் பொடி வரவில்லை. இந்த கொரோனா பரவல் காரணமாக பட்டணம் பொடி தாயாரிக்கும் சிறுகுறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரத்துடங்கியதால் கட்டுப் பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. இப்போது டீ கடைகள்,ஓட்டல்கள் ,சலூன் கடைகள், சில கட்டுப்பாடுகளுடன் ஏசி இல்லாத கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு கடைக்கு 62 நாட்களுக்கு பிறகு பட்டணம் பொடி வந்த நிலையில், மதுப்பிரியர்கள் போன்று கூட்டம் அலைமோதியது. வாடிக்கையாளர் கூட்டமாக வரிசையில் நின்று அமதியாக மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றது அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.
எஸ்.யாழினி