அடித்து நொருக்கப்பட்ட தேவாலயம்..!கேரள திரைத்துறையினர் அதிர்ச்சி..!

படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட தேவாலயம் செட் அடித்து உடைக்கப்பட்டது. கேரள திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மின்னல் முரளி’ என்ற படத்தில் குரு சோமசுந்தரம் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இயக்கம் பசில் ஜோசப். இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறார்.
இந்தப் படத்திற்கு தேவாலயம் ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவு சமீ தாஹிர்.

எர்ணாகுளம் அருகில் இருக்கும் கலடியில் ஆற்றின் கரையில் இந்தப் படத்திற்காக தேவாலயம் செட் அமைக்கப்பட்டது. ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு தேவாலயத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர்.

இந்த சூழ்நிலையில்  அகில இந்து பரிஷத், அகில பஜ்ரங் தள் ஆகிய இந்து அமைப்புகள் அந்த தேவாலய செட்டை அடித்து, உடைக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது. இது அனுமதி இல்லாமல் சங்கராச்சாரியார் மடத்துக்கு அருகில் இருந்ததால் உடைத்தோம் என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

மேற்கூறிய குற்றசாட்டை அந்தப் பகுதி பஞ்சாயத்து அமைப்பு முற்றிலும் மறுத்துள்ளது. அவர்கள் அனுமதி பெற்றுதான் பிப்ரவரி மாதம் இந்த செட் அமைக்கப்பட்டது என்று பஞ்சாயத்து அமைப்பு கூறியுள்ளது.

                                                                                         குருசோமசுந்தரம் 
இதுபற்றி படத்தின் இயக்குனர் பசில் ஜோசப் கூறும்போது, இந்த கொரோனா காலகட்டத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது  மிகவும் வருத்தமான ஒன்று. இதுபோன்ற சம்பவம் கேரளாவில் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த செட் அமைப்பதற்கு ரூ50 லட்சம் வரை செலவானது.  இது மிகப் பெரிய இழப்பு என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது சம்பந்தமாக பெரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

திரை-சோமஸ்