தமிழ் பேசியதால் நான் நிராகரிக்கப்பட்டேன்..பிரபல நடிகை..!
திரைத்துறையில் சாதித்து பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தனது ஆரம்ப காலகட்டத்தில் இந்த துறைக்கு வருவதற்கான வாய்ப்புக்கா எத்தனை பிரச்சனைகளை,சவால்களை கடந்து வந்தனர். என்பதை தனது அனுபவத்தின் வழியாக நமக்கு புரிய வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, தர்மதுரை, கானா போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் ரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தான் சினிமாவில் சந்தித்த போராட்டங்களை பகிர்ந்து கொண்டார். தான் தமிழில் பேசியாதாலும், தன்னுடைய நிறத்தையும், சுட்டிக் காட்டி நிராகரிக்கப் பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் இருந்த போராட்டங்களை விரிவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டார்.
சாதாரண நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண் தான் நான். ஒரு ஹௌசிங் போர்டுல பிறந்து வளர்ந்த லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என்னுடைய வீட்டில் நாங்க மொத்தம் ஆறு பேரு, அம்மா, அப்பா, 3 அண்ணன்கள் அப்புறம் நான். நான் தான் கடைசி பொண்ணு எனக்கு 8 வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு, அதுக்கப்புறம் எங்க அம்மா தான் எங்களை வளர்த்து ஆளாக்கினார்.
அம்மா எல்.ஐ.சி ஏஜெண்டாகவும், வீடு வீடா துணிவியாபாரம் செஞ்சுதான் எங்களை காப்பாத்தினாங்க.
எனக்கு ஒரு 12 வயசு இருக்கும் என்னுடைய மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்துட்டார். அண்ணன் இறந்தது தற்கொலையா கொலையானு கூட எங்களுக்கு இன்னும் தெரியலை. அப்போ அவர் ஒரு பெண்ணை காதலிச்சாரு. இன்னொரு அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு முடிச்சிட்டு கைநிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சார், அவரும் கொஞ்ச நாள்லயே ஆக்சிடென்ட்ல இறந்துவிட்டார்.அந்த இழப்பு அம்மா அப்படியே உடஞ்சி போயிட்டாங்க.
நான் முதல் முதலில் ரூ225 க்கு சூப்பர் மார்க்கெட் முன்னாடி சாக்லேட் ப்ரோமோஷன் வேலைக்கு சேர்ந்தேன். அதுக்கப்புறம் சீரியல்ல நடிக்க வாய்ப்பு அப்போ ஒரு நாளைக்கு 1,500 ரூபா குடுத்தாங்க ஆனா அதுவும் மாசத்துல ஆறு நாட்கள் தான் வேலை இருக்கும்.
அப்புறம் நான் படங்கள்ல நடிக்க வாய்ப்புத்தேடுனேன், பல இயக்குனர்கள் என்னை உதாசீனப்படுத்துனாங்க. சிலர் என்னை நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, போய் வேற வேலை இருந்தா பாருங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என, என்னை உதாசீனப்படுத்தினார்கள். அப்புறம் எனக்கு “அவர்களும் இவர்களும்” படத்துல நடிக்குற வாய்ப்பு. பின் இயக்குனர் ரஞ்சித் சார் மூலம் வாய்ப்பு கொடுத்தார். யாரு என்ன சொன்னாலும் உங்களிடம் திறைமை, நம்பிக்கை இருந்தால் உங்களாலும் ஜெயிக்க முடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.