சிக்கல்… வங்கிக் கடன் செலுத்தாவிட்டால்…!

வங்கிக் கடன்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக தவணை விலக்கு குறித்து நிறைய பேருக்கு ஏமாற்றமும் குழப்பமும் இருக்கு

ஏமாற்றம் : தவணை விலக்குன்னு சொன்னதும் பல பேரு மூணு மாசத்துக்கு பணமே கட்ட வேண்டாம், சும்மாவே கடனில் மூணு தவணை கழிச்சிடுவாங்கன்னு நினைச்சாங்க. அது இல்லேன்னதும் அவங்களுக்கு பெருத்த ஏமாற்றம். Waiver கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் Moratorium கிடைத்ததால் வந்த Sour Grapes தான் இது. கடன் தள்ளுபடி இல்லை, இது வெறும் தற்காலிக விலக்கு என்று தகவல் மட்டும் அவங்களுக்குச் சொன்னாப் போதும்.

குழப்பம் : இது எப்படி செயல்படும்னு பலருக்கு குழப்பமா இருக்கு.

// இதனால் எவ்வித பண இழப்பும் இல்லை//
// இன்னும் 60 மாசம் இ எம் ஐ மிச்சமிருந்தா முணு மாசம் கழிச்சு ஆரம்பிச்சு அதே 60 மாசம் கட்டினா போதும்//
//தவணை விலக்குன்னு சொல்லிட்டு ஏமாத்தறாங்க, //
// இந்த மூணு மாசத் தவணையை மொத்தமா அசலுடன் சேத்து கடனை ஏகத்துக்கும் ஏத்தி விட்டுடுவாங்க//
//திட்டமே ஒரு மோசடி, இதனால் யாருக்கும் பிரயோசனமேயில்லை//

இப்படி இது குறித்து பல Misunderstanding ஓடிக்கிட்டு இருக்கு

ஒரு உதாரணம் : வீட்டுக்கடன் 50 லட்சம் வட்டி 10% காலம் 240 மாதம். மாதத் தவணை ரூ 48251 வாங்கி ஒரு ஈ எம் ஐ கூட கட்டல – மூணு மாசம் தவணை விலக்கு வாங்கறார். மூணு மாசம் முடிவில் வட்டி மட்டும் ஏறி அசல் 50 லட்சத்திலேருந்து 51,25,000 ஆயிரம் ஆக இருக்கும். இப்ப கணக்கை மொதல்லேருந்து ஆரம்பிப்போம் 240 மாசம் 10% வட்டி – இப்ப புது ஈ எம் ஐ 49,457.36 ஆகிவிடும். இப்ப அவருக்கு ஒரு சாய்ஸ் 49457 ரூபாய் கட்டி 240 மாசத்திலேயே கடனை அடைக்கலாம். இல்ல அவர் ரெண்டாவது சாய்ஸ் முன்ன முடிவு பண்ண 48251 தான் கட்ட விரும்பரார். அப்ப எக்சலில் “கோல் சீக்” உபயோகிங்க. 49457 ஈ எம் ஐயை 48251 ஆக மாற்றுவதற்கு தவணையை மாற்றியமைத்தால் கிடைப்பது 260.75 மாதங்கள் – 240 மாதங்களுக்கு பதிலா 261 மாதங்கள் ஆகும் கடன் முடிய. தவணை விலக்கு மாதங்களின் போது மிச்சமிருக்கும் அசலுக்கு வட்டி ஏறிக்கிட்டேதான் இருக்கும்

மூணு ஈ எம் ஐ எல்லாம் அசலுடன் சேர்க்கவில்லை. மிச்சமிருக்கும் கடனுக்கு அதாவது Outstanding Balance க்கு வட்டி மட்டும் ஏறிக்கிட்டே தான் இருக்கும். இந்த மூணு மாசம் தவணை கட்டாததால் அசல் ஏறிக்கிட்டே போகும். அப்புறம் பணம் கட்ட ஆரம்பிச்சதும் 240 மாதங்களில் முடிக்கத் தேவையான அளவு இ எம் ஐ கட்டாததால் அச்சிறு தொகை அசலுடன் கூடும், வட்டி அதிகமாகும், மறுபடியும் கம்மி இ எம் ஐ கட்டறீங்க – இது இப்படியே தொடர்ந்து 240 மாச தவணை 261 மாதங்களாக ஆகிவிடும். கூட்டு வட்டி பத்தி புரிஞ்சவங்களுக்கும் எக்செலில் Amortization போடத் தெரிஞ்சவர்களுக்கும் இது எளிதில் புரியும்.

இது இல்லாம இருந்திருந்தா – கடன் கட்ட முடியாதவர்களின் சிபில் ஸ்கோர் அடி வாங்கியிருக்கும், அவர்களுக்கு வீண் மன உளைச்சல், வங்கிக்கும் வசூலிக்கும் பிரச்சனை வந்திருக்கும்.

தவணை கட்டலேன்னா மிச்சமிருக்கும் அசலுக்கு வட்டி போட்டு அசல் ஏறத்தான் செய்யும். அமார்டைசேசன் அடிப்படை அப்படித்தான் செயல்படும். இப்படி மாத்தி யோசிச்சுப்பாருங்க – இன்னிக்கு போய் மூணு மாச ஈ எம் ஐ எக்ஸ்ட்ராவா கட்றீங்கன்னு வச்சிப்போம் – அப்ப உங்க டென்யூர் 3 மாசம் குறையாது 18 மாசம் குறையும் – 222 மாசத்திலேயே கடன் முடிந்து போகும். அப்ப போய் யாரும் ஐயா நான் மூணு தவணை தான் அதிகமா கட்டுனேன், அதுனால் மூணு மாசம் மட்டும் டென்யூர் குறையுங்க, அதுக்கு மேல குறைக்காதீங்கன்னு சொல்ல மாட்டாங்க – ஏன்னா அப்பவும் அமார்டைசேசன் அப்படித்தான் வேலை செய்யும்.

என்ன செய்யணும்
மேல சொன்ன அதே உதாரணம் எடுத்துக்கோங்க. விலக்கு எடுக்காம இருந்தால் 48251 * 240 மாசம் = 1,15,80240 ரூபாய் கட்டுவீங்க, விலக்கு எடுத்தா (அ) 49457.36*240 = 1,18,69,766 அல்லது (ஆ) 48251*261 = 1,25,93,511 கட்டுவீங்க, ரெண்டுமே ஒரிஜினல் தொகையை விட அதிகம். ஆகவே சம்பளம் / வருவாய் இருந்தா வழக்கம் போல் கடனைக் கட்டுங்க, வருமான இழப்பு ஏற்ப்பட்டிருந்தால் இச்சலுகையை உபயோகிங்க, அதில் தவறேதும் இல்லை.

இந்த மூணு ஈ எம் ஐ கட்டாம அதை வேற செலவுகளுக்கு உபயோகிக்கலாம் என்றோ மியூச்சுல் ஃபண்டிலோ வேறு எங்கோ முதலீடு செய்யலாம் என்றோ நினைக்காதீங்க – நீங்க கட்டாம விடறது வெறும் ஒன்றரை லட்சம் அதுக்கு நீங்க திருப்பிக் கட்டப் போவது 10 லட்சம் ரூபாய்.
வேறு வழியின்றி விலக்கு எடுக்கறவங்களும் 3 மாசம் கழிச்சு கட்ட ஆரம்பிக்கும் போது ஈ எம் ஐ யை விட மாசா மாசம் கொஞ்சம் அதிகமா கட்டி கடனை ஒரிஜினல் காலத்துக்குள் முடிக்கப் பாருங்க..

ஸ்ரீராம் நாராயணன் முகநூல் பதிவு