பத்திரிகையாளர் மரணம்! விஜய் சேதுபதி மனிதம்!
பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான நெல்லை பாரதி (வயது 53) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமைடைந்தார். கொரோனா பீதியையும் பொருட்படுத்தாமல், நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.
பல்வேறு பிரபல திரை இதழ்களில் பணியாற்யவர் மூத்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி.
சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் இவர். தற்போது, இணைய இதழ் ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பத்துக்கும் குறைவானவர்களே அந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த சில வருடங்களாக இவருடன் நெல்லை பாரதி நெருக்கமாக பழகி வந்தார்.
நெல்லை பாரதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி, பாரதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
“இந்த கொரோனா பீதி காலத்திலும், நேரடியா வந்து அஞ்சலி செலுத்தி நட்பை போற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி” என பலரும் நெகிழ்ந்து கூறினர்.