பெற்றோரை காப்பாற்ற காலையில் ஆண் மாலையில் பெண்..!அவ்வை சண்முகியாகி வலம் வரும் நபர்…!

 

 
மதுரை: ஆணாக இருந்தால் வேலை கிடப்பதில்லை. சாயங்காலம் ஆகிவிட்டால், ஜாக்கெட், புடவை, தலையில் பூ.. என மறைவிடத்துக்குச் சென்று தன்னையே மாற்றிக் கொண்டு வேலைக்கு  ஓடுகிறார். அந்த நபரின் சொந்த ஊர் மானாமதுரையாம்.. இவருக்கு 40 வயது இருக்கும். லுங்கி, சட்டையுடன் கையில் ஒரு மஞ்சல் பை மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் ஒரு மறைவான  இடத்தைத் தேடி ஒடிகிறார்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் தில், புடவை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வருகிறார். இவருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் பெண் வேடமிட்டு, வீட்டு வேலை செய்கிறார்.

 மொத்தம் 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, பெருக்கி கூட்டி சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்கிறார்.. சாயங்காலம் வேலை முடிந்ததும், திரும்பவும் அதே மறைவிடத்துக்கு வந்து.. விக்கை கழட்டிவிட்டு, லுங்கி, சட்டை அணிந்து பஸ் ஏறி ஊருக்கு செல்கிறார்.

இதுதான் தினமும் வழக்கமான ஒன்று. அப்படி இவர் ஒதுங்குவதை சிலர் கவனிக்க…
இவரை மடக்கி பிடிக்கவும்தான் விஷயம் வெளியாகியுள்ளது. தனது பெயர் ராஜா.. வேலை செய்யும் இடங்களில் ராஜாத்தி என கூறியுள்ளார்..

சொந்த ஊரில் எனக்கு எந்த வேலை கிடைக்கல.. வயசான அம்மா, அப்பாவை எப்படி காப்பாத்துறதுன்னு வேற வழி தெரியல.. ஒருவேளை பெண்ணாக மாறினால் வேலை கிடைக்கும்னு  நினைச்சேன். பெம்பள வேஷம் போட்டுட்டு சொந்த ஊரில் வேலை பார்க்க முடியாது.. எல்லாரும் கேளி செய்வாங்க.. அதனாலதான் ஊருவிட்டு வந்து மதுரையில் வேலை செய்கிறேன்…

இப்ப மூன்று வீட்டில் வேலை செய்து வருகிறேன்.. ஆனால் யாருக்கும் என் மேல சந்தேகம் வரல.. ஒவ்வொரு நிமிஷமும் பெண்கள் போலவே இருக்க ரொம்ப கஷ்பாடுகிறேன்  எனக்கு வேற வழி தெரியவில்லை.

நான் என் முதலாளிகளுக்கு எந்த துரோகமும் செய்யல.. ஒருநாள் இந்த விஷயம் வெளியே தெரியும்னு நான் எதிர்பார்த்ததுதான். அப்படி தெரியும்போது, என்னை மன்னிச்சு இவங்களே திரும்பவும் வேலைக்கு வெச்சிப்பாங்கன்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு.. இன்னும் எனக்கு கல்யாணம் கூட ஆகல” என்கிறார் இந்த ராஜா என்ற ராஜாத்தி!