தடயம்: இது தடம் பதித்த வெற்றி!
க்ரைம் த்ரில்லர் ஜானரில் டிஜிட்டல் திரையை அதிரச் செய்துள்ளது ‘தடயம்’ வெப் சீரிஸ். அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் ஜீ5 (ZEE5) தளத்தில் வெளியானது. சமுத்திரக்கனி மற்றும் ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆந்திரா-தமிழக எல்லைப் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிரடி போலீஸ் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ். உருவான இந்தத் தொடர், குற்றவாளிகளைக் கண்டறியும் தனித்துவமான விசாரணை முறை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது .
இந்த அதிரடி வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த “வெற்றி விழாவில்”, படக்குழுவினர் நெகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பகிர்ந்துகொண்ட வைரல் வரிகள் இதோ:
அழகன் தமிழ்மணி:
“பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் தான் என் வாழ்க்கை தொடங்கியது. என் மகனை நான் வெறும் தயாரிப்பாளராக மட்டும் வளர்க்கவில்லை; சினிமாவின் அடிமட்டத்திலிருந்து கஷ்டங்களை உணரச் செய்து உருவாக்கியிருக்கிறேன். என் உதவி இல்லாமல் அவன் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. ‘தடயம்’ பார்க்க உட்கார்ந்தால், அடுத்தது என்ன என்ற ஆர்வத்தில் இரவு 11:45 மணி வரை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது!”
நடிகர் பிரேம்:
“இவ்வளவு பெரிய வெற்றிப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் செம ஹேப்பி! தயாரிப்பாளர் அஜய், இயக்குனர் நவீன் மற்றும் கௌசிக் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை ஒரு உடன் பிறந்த தம்பி போலவே பார்த்துக் கொண்டனர். கனி அண்ணன் மற்றும் ராஜ் அண்ணனுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.”
சமுத்திரக்கனி:
“ஒவ்வொரு மனசும் ஒரு வெற்றிக்காகத்தான் ஏங்கிக் கிடக்கும். இந்த வெற்றி மனசுக்குள்ள இருந்த பல
விஷயங்களைச் சரி பண்ணிடுச்சு. கௌசிக் மேல வச்ச நம்பிக்கையில்தான் இந்த புராஜெக்ட் குள்ள வந்தேன். ஒருத்தரை நம்பிட்டா கண்ணை மூடிக்கிட்டு பின்னாடி போயிடணும்! முக்கியமா, ஊரெல்லாம் ஜெயிச்சிட்டு வந்தாலும் அப்பா கொடுக்கிற அங்கீகாரம் தான் பெருசு. அது அஜய்க்கு சீக்கிரமே கிடைச்சிருக்கு. இந்த வெற்றி இன்னும் ஓடுறதுக்கான தெம்பைக் கொடுத்திருக்கு. வெல்வோம்!”

