“தமிழ் தலைப்பு பிரச்சினையை ஏற்படுத்துகிறது!”: வைரமுத்து தகவல்

“தமிழ் தலைப்பு பிரச்சினையை ஏற்படுத்துகிறது!”: வைரமுத்து தகவல்

அரபி புரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்க, வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில்  சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஃபைண்டர்’. மேலும் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி மற்றும் பிரானா ஆகியோர் நடிக்கின்றனர்.

சூர்ய பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

“சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம்; நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.இப்படத்தின் இயக்குனரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்களை உற்று கவனித்தேன். அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.

புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை நான் பார்ப்பதில்லை, அவர்களது உழைப்பைத்தான் பார்ப்பேன்.  இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது.

படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.

சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது, அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும் ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும். இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்.

இந்த படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சினை ஏற்படுத்துகிறது என்றனர். தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் சுப்ரமணியன், தமிழன் என்பதால் ஒப்புக் கொண்டேன்.

சார்லி ஒரு கெட்டிகார நல்லவன். நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான். அவனது கலை மென்மேலும் வளர வேண்டும்”  என்று பேசினார்.

 

Related Posts