ZEE5 ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’: ஓ.டி.டி. உலகின் எமோஷனல் ‘பவுலிங்’!

ZEE5 ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’: ஓ.டி.டி. உலகின் எமோஷனல் ‘பவுலிங்’!

கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு! அந்த உணர்வின் உச்சத்தை, ஒரு குட்டி கிராமத்து ரசிகர்களின் கனவுப் பயணத்தின் வழியே சொல்ல வருகிறது ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் கடைசிப் போட்டியை நேரில் பார்க்க சென்னை நோக்கிப் புறப்படும் அந்த ரசிகர் கூட்டத்தின் பயணம், வெறும் மைதானப் பயணமாக மட்டும் நிற்கவில்லை; அது நட்பு, சாகசம், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர்!

சவிர் சுதாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆறு அத்தியாயத் தொடர், கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவரின் மனதிற்கும் நெருக்கமான ஒரு கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், நான் கடவுள் ராஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ள இந்தத் தொடர், தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

“இலக்கை விட, அந்தப் பயணம் தரும் அனுபவமே முக்கியம்” என்பதை உணர்த்தும் மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. கிரிக்கெட் வெறியர்களும், எமோஷனல் கதைகளை விரும்புபவர்களும் மிஸ் பண்ணக்கூடாத ஒரு விருந்து இது!

இந்தத் தொடருக்கான முன்னோட்டத்தை இங்கே காணலாம்:

https://youtu.be/ZKqU9H8r17c?si=ztgg1ZjLj_XcRWIr

Related Posts