“ரஜினியின் ஆன்மிகம்!”: வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்
ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பேசியது குறித்து, யுடியுப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த பத்திரிகையாளர் டி.வி.சோமு, ரஜினியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவர், “ ரஜினியின் ஆன்மீகம் என்பது அதீத சுயநலம். சூப்பர் ஸ்டார் பட்டம், விஜய் மீது தாக்குதல் என்பதிலேயே அக்கறையாக இருக்கிறார்.
தவிர கலாநிதி மாறனின் மகள் காவ்யாவின், ஹைதரபாத் ஐ.பி.எல். அணி தோற்பது குறித்தும் அதனால் காவ்யா முகம் வாடுவது குறித்தும் கவலை தெரிவித்து உள்ளார்.
மணிப்பூரில் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு, பலாத்காரப்படுத்திக் கொல்லப்பட்ட பெண்களின் அவலம் ரஜினியை பாதிக்கவே இல்லை.
தனது போட்டியாளராக விஜயை நினைத்துக்கொண்டு, அவரை காக்கா என்கிறார். தன்னை விமர்சிப்பவர்களை, நாய் என்கிறார். (இந்த நாய் விவகாரத்தை நான் மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன்.)
இது ரஜினியின் தரத்தையே வெளிப்படுத்துகிறது.
விலங்குகள், பறவைகள் மீது மனிதர்களின் குணங்களை திணிப்பது சிறுபிள்ளைத்தனம். ‘நரி தந்திரமிக்கது’, ‘புலி வீரமிக்கது’ என்பதெல்லாம் குழந்தைத்தனம். எல்லா மிருகங்களும் தங்களது உணவுக்காக தந்திரங்களை மேற்கொள்ளும், பாயவும் செய்யும்.
காக்கா என்றால் இழிவானது, பருந்து உயர்வானது என்கிற எண்ணமும் அப்படித்தான்.
தவிர, உண்மையில் காக்காவைத்தான் பருந்து தொல்லை செய்யும். இதை மாற்றிச் சொல்கிறார் ரஜினி. தவிர ஏற்கெனவே, ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என வசனம் பேசினார். ஆனால் சிங்கம், கூட்டமாக வாழும் பிராணி.
இப்படி இவர் அறியாமையில் இருக்கக் காரணம், அறிவை மேம்படுத்திக் கொள்ளத் தேவை இல்லாத சூழல்தான். இருக்கும் அறிவுக்கே பணம், பிரபல்யம் கிடைத்துவிட்டது. தவிர ஆன்மிகம் என்கிற பெயரில் அவர் சொல்லும் கதைகளை, பெரிய விசயமாக பலரும் நினைக்கிறார்கள். இதுவே போதும் என நினைக்கிறார் ரஜினி” என்று கடுமையாக விமர்சித்து உள்ளார் பத்திரிகையாளர் டி.வி.சோமு.
அந்த வீடியோ:
