தமிழ்நாட்டின் பெருமை ஜல்லிக்கட்டு’ ஈசா சத்குரு ட்விட்டர் பதிவு!
கோவை; ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கோவை செட்டிப்பாளையத்தில் நேற்று (பிப்.23) நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் தமிழ்நாட்டின் பெருமை ஜல்லிக்கட்டு,தமிழ் இளைஞர்களின் இயல்பான வீரம்,சவாலை எதிர்கொள்ளும் தீரத்தின் அற்புதமான வெளிப்பாடு.தனித்துவமான இது,சரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டு,காளைகள் மற்றும் அனைவரின் பாதுகாப்பை உள்ளடக்கி பிரமாதமான விளையாட்டாக வளர்க்கப்படவேண்டும்” என கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை நீக்க வலியுறுத்தி தேசிய ஊடகங்களில் தமிழ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக சத்குரு பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராசாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.