மாஸ்டர், ஈஸ்வரன் படதிற்கு 100 சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி..!

சென்னை: நாடு முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா காரணமாக உலகங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டு பின் சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கு திறக்க அனுமதி அளித்தது.

இதன் காரணமாக விபிஎப் கட்டணம்,மற்றும் 50% இருக்கைகளுடன்  தியேட்டர்களை திறக்க தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து  8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் விபிஎப் கட்டணத்தை கட்டவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் புதிய திரைப்படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. பிறகு அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டன. கொரோனா காரணமாக எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

மிக குறைந்த அளவில் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்ததால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இதுவரை பெரிய படங்கள் தியேட்டருக்கு வரவில்லை. வரும் பொங்களுக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைக்குவருவதால் ரசிகர்கள் அதிக அளவு வருவார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில் நடிகர் விஜய், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து, கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில்  தியேட்டர்களில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் படி நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அவரும் இந்த கோரிக்கையை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருவரின் கோரிக்கையை ஏற்று நூறு சதவிகித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு இருவர் தரப்பிலும் நன்றி தெரிவித்துள்ளனர். 

Related Posts