‘ஈஸ்வரன்’ படத்தை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!!

சென்னை; இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம்  ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று  நடைபெற்றது. இதில் வசனகர்த்தா பாலாஜி கேசவன் , நடிகர் பாலசரவணன் , நடிகை நந்திதா ஸ்வேதா , நடிகை நிதி அகர்வால்  ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் அவர் பேசும் போது இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாக தமிழ் பேசுகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

நடிகை நந்திதா சிறப்பாக நடித்திருப்பதாகவும்,மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள் என கூறியிருக்கிறார்.

நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே  ஒரு படத்தையே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம்.

என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ‘ஈஸ்வரன்’ நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

Related Posts