எப்பொது வெளியாகும் சூரரைப் போற்று..? ஜி.வி பிரகாஷ் பதில்..!
சென்னை:
கொரோனா பாதிப்பின் காரணமாக பிரபல நடிகர்களின் பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. அந்த வரிசையில் சூர்யாவின் ’’சூரரைப் போற்று’’ இதற்கு விதிவிலக்கு இல்லை. பொதுவாக திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு முன் தணிக்கை குழு பார்த்தபின்பே சான்றிதல் வழங்கப்படும். அதே போல் சூரியாவின் ’’சூரரைப் போற்று’’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கை குழு.
2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது சூரரைப் போற்று. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து, தணிக்கை சான்றிதழையும் வாங்கிவிட்டது.
கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் இன்நேரம் திரைக்கு வந்திருக்கும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்.
ஒரு சாதாரன இளைஞன் மாறா என்ற [சூர்யா] எப்படி விமான கம்பெனி ஓனராக எப்படி மாறுகிறார் என்பதே சூரரைப் போற்று படத்தின் கதை. விறுவிறுப்பாக கதை நகர்வுகளை திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதியே சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தன்னை பல பரிமாணங்களில் அழகாக செதிக்கி நடித்துள்ளார் சூரியா.
’சூரரைப் போற்று’ இசை வெளியீட்டு விழா எல்லோரும் ஆச்சரிப்படும் வகையில் இருந்தாது. ஆம் நடுவானில் இசை வெளியீடு நடுத்தர இதுவரை விமான நிலையத்துக்கு கூட வராத 70 மாணவர்கள் 100 பேரை தனது சொந்த செலவில் பயணிக்க வைத்து ’’வெய்யோன் சில்லி’’ வெளியிட்டார். இந்த இசை வெளியீடு ஒட்டு மொத்த சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனறு கூறியிருந்தனர். அது இப்போது சாத்தியமில்லை. கொரோனா தொற்றால் நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழ்நிலையில் புது படங்கள் ரிலீஸ் சாத்தியமில்லை. ஆகவே தற்போது சூரரைப் போற்று படதிற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.